2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சந்தேகத்தில் கைதாகி விடுதலையானவர் தற்கொலைக்கு முயற்சி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை பிரதேசத்தில் இளம் தம்பதியினரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது உடலில் நஞ்சு கலந்திருப்பதாகவும் இவர் தற்கொலைக்கு முயன்ற நிலையிலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கஹவத்தை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும், கஹவத்தை மர்மக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிரபராதியான தனக்கு இந்த கைதினால் அபகீர்த்தி ஏற்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் மனைவி தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .