2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
 
கட்டுகஸ்தோட்டையில் முச்சக்கரவண்டிகளின் உதிரிப்பாகங்களை திருடிவந்த குற்றச்சாட்டின் பேரில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டையில் நிறுத்திவைக்கப்படுகின்ற முச்சக்கரவண்டிகளின் உதிரிப்பாகங்கள் திருட்டுப்போவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இந்த முச்சக்கரவண்டிச் சாரதியை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டபோது, இரண்டு முச்சக்கரவண்டிகளின் திருடப்பட்டதாகக் கூறப்படும் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .