2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போலி உறுதி பத்திரங்கள் தயாரித்தவர் கைது

Super User   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

அடுத்தவர்களின் காணிகளுக்கு போலியான உறுதி பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தயாரித்து பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை கண்டி மோசடி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இவ்வாறான மோசடி சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தினால் 7 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே இ பொலிஸார் இந்த சந்தேகநபரை தேடிவந்துள்ளனர்.

பல்வேறு பிரதேசங்களில் இந்த சந்தேகநபர் ஏனையவர்களின் பெறுமதியான காணிகளை இனங்கண்டு, அவற்றிற்குப் போலியான உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்து அதிக விலைளுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நீதிமன்ற பிடிவிறாந்தின் பின்னர் சந்தேகநபர் நீண்ட காலமாக குருநாகல், புத்தள மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் மறைவாக இருந்துவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கண்டி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய ஹங்வெல்ல பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .