2021 மே 06, வியாழக்கிழமை

சடலத்தை அடையாளம் காணுமாறு கோரிக்கை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம். ரிஃபாத்)
ரயிலில் மோதி உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண்பிக்குமாறு பொலிஸார்  பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

கடுகண்ணாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதுண்டு நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்த சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒருவரை அடையாளம் காண்பதற்காகவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் பலன - வெரலகொல்ல எனுமிடத்தில் அவர் ரயிலில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.

ரயிலில் மோதி பலத்த காயமடைந்த இந்த நபர், ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .