2021 ஜனவரி 27, புதன்கிழமை

நீர் பதப்படுத்தும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


சிறுவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட 39 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கும் தாய் சேய் நல நிலையங்களுக்குமான நீர் பதப்படுத்தும் இயந்திரம் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இன்று கொத்மலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத்தலைவரும் கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொத்மலை பிரதேச செயலாளர் மேனக ஹேரத், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொத்மலை பிரதேச பொறுப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான குமார தசநாயக உட்பட பலர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .