2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இலங்கையில் எந்தவொரு பாடசாலையும் இன, மத, பால்நிலை வேறுபாட்டில் பிரிபடாது: பந்துல

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


இலங்கையில் எந்தவொரு பாடசாலையும் இதன் பின் இன, மத, பால்நிலை வேறுபாடு அடிப்படையில் பிரிக்கப்படமாட்டாதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வைபவமொன்றி;ல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நுகவெல மத்திய கல்லூரி, நுகவெல மகளிர் கல்லூரி மற்றும் நுகவெல ஆண்கள் பாடசாலை என்பவற்றை ஒன்றிணைத்து மத்திய மாகாணத்தில் மிகப் பெரிய பாடசாலை தொகுதியாக நுகவெல பாடசாலை தொகுதியை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கையில் மொத்தமாக 9,731 பாடசாலைகள் உள்ளன. இதில் மகளிர் மாடசாலைகள் 130 ஆகும். ஆண்கள் பாடசாலை 209 ஆகும். மீதியாக 9,302 கலவன் பாடசாலைகளாகும். 

சில பெற்றோர்கள் கலவன் பாடசாலையெனின்  பயப்படுகின்றனர். இலங்கையில் பல்கலைக்கழகங்களோ, தொழில்நுட்பக் கல்லூரிகளோ ஆண்கள், பெண்களென பிரிக்கப்பட்டவையல்ல. அவை அனைத்தும் கலவனானவே உள்ளது. எனவே கலவன் பாடசாலைகள் குறித்து பெற்றோர்கள் பயப்படவேண்டிய தேவையில்லை.

இலவசக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட திட்டமொன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் இலங்கையில் 1000 பாடசாலைகளை இடைநிலைப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்கின்றோம். இதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தேவையான அனைத்து வளங்களும் வழங்கப்படும்' என்றார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .