2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மலையகத்தில் கடுங்காற்று

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையகப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை முதல் வீசுகின்ற கடுங்காற்றினால் மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, றம்பொடை போன்ற பகுதிகளில் இன்று காலை வீசிய கடுங்காற்றினால் மரங்கள் முறிந்து வாகனங்களின் மீதும் வீடுகளின் மீதும் விழுந்துள்ளன.

அத்துடன் பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோர்வூட் போன்ற பகுதிகளிலும் கடுங்காற்று வீசத்தொடங்கியுள்ளதால் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

இந்த கடுங்காற்றினால் மலையகத்தில் பல பகுதிகளில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை போன்ற பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுங்காற்று வீசிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .