2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிக்பாத்

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது  நகரவாசிகள்,  இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம்  பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 

பொலிஸார் இப்பெண்ணிடம்  மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கான இவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .