2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நூரளை நகர முதல்வருக்கு எதிராக பிரதி முதல்வர் முறைப்பாடு

Kanagaraj   / 2013 ஜூலை 26 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.தியாகு


ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் உள்ள நுவரெலியா மாநகர சபையின் நகர முதல்வருக்கு எதிராக பண மோசடி தொடர்பாக ஊழல் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த  ஆண்டு நடைபெற்ற எப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வின்போது மாநகர சபையின் பொதுக்கணக்கிற்கு வரவு வைக்கப்படவேண்டிய நிதியினை வேறு கணக்கில் வைப்பிலிடப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதி நகர முதல்வர் திஸ்ஸ செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை ஊழல் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவிற்கு மேற்படி முறைப்பாடை செய்துள்ளார்.
இது தொடர்பாக மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே இன்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர் மகாநாடு ஒன்றை மாநகர சபை கேட்போர் கூட மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்களான இ.தொ.கா உறுப்பினர் எம். சந்திரன், குமாரதேசப்பிரிய, ஆர். கேதீஸ்(இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னனி உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக  முதல்வர் விளக்கமளிக்கையில்

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் என் சம்பந்தமான நிதி மோசடி தொடர்பாக செய்திகள் வெளிவந்துள்ளன.இதற்கு விளக்கமளிக்கும் முகமாகவே இந்த பத்திரிக்கையாளர் மகாநாடு கூட்டப்பட்டுள்ளது. 1953ஆம் ஆண்டு முதல் மாநகர முதல்வர் நிதி என்ற ஒன்று நடைமுறையில் இருந்துள்ளது.இந்த நிதியின் மூலம் வசந்த கால நிகழ்வுகளும் நலன்புரி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி வைத்திய செலவினங்களுக்காகவும் வரும் நோயாளர்களுக்கு நிதி இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியானது என்னால் ஆரம்பிக்கப்பட்டதல்ல கடந்த காலங்களில் அதாவது 1953ஆம் ஆண்டு முதல் மாநகர சபையை ஆட்சி செய்த அனைத்து முதல்வர்களும் இந்த நிதியை முன்னெடுத்துள்ளனர்.எனவே இது தொடர்பாக நான் எங்கு சென்றும் எனது தரப்பு விடயங்களை தெளிவுபடுத்த தயாராகவள்ளேன்.

நான் மக்களின் நிதியை என்றுமே முறையற்ற விதத்தில் கையான்டதில்லை அவ்வாறான ஒரு தேவை எனக்கு இல்லை பிரதி முதல்வர் பகல் கனவு காண்கின்றார் முதல்வர் ஆவதற்கு அது நடைமுறை சாத்தியமற்றவிடயமாகும்.மாநகர சபையின் பொதுக் கூட்டத்தின் மூலமாக அனைத்து உறுப்பினர்களும் வசந்த கால நடவடிக்கை தொடர்பாக முழு அதிகாரத்தையும் எனக்கு வழங்கியுள்ளனர்.

அதன் பிரகாரம் நான் குழு ஒன்றை நியமித்து வசந்த கால களியாட்ட நிகழ்வுகளை செய்துள்ளேன்.பிரதி முதல்வர் எமது மாநகர சபையின் மூலம் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி பணிகளுக்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளார்.

மேலும் மத்திய மாகாண முதலமைச்சர்,ஆளுநர்,பிரதான மத்திய மாகாண பிரதான செயலாளர் ஆகியோருக்கு நிதி நடவடிக்கை தொடர்பாக அறிவிக்கப்பட்டு.கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்டு அதில் நிதி முறையாக நுவரெலியா மாநகர சபையால் கையாளப்பட்டுள்ளதாக அறிக்கையும் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் குறிப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--