2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இலங்கை உணவில் தன்நிறைவு கண்டுள்ளது: பசில்

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


'இலங்கை நாடு தற்போது உணவில் தன்நிறைவு கண்டுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி பொல்காவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

'2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் ஆட்சியை கையிலெடுக்கும் போது நாடு பாரிய பாதாளத்தில் இருந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது வேலையாக நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இன்று நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் சரலமாக செல்லலாம்.

அடுத்ததாக நாடு உணவில் தன்நிறைவு கான வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி பல திட்டங்களை நடை முறைக்கு கொண்டுவந்தார்.

பாரிய குளங்கள் புனரமைக்கப்பட்டன. உர மானியம் வழங்கப்பட்டது. இன்று நெல் உற்பத்தியில் நாடு தன்நிறைவு கண்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு அரிசி மணியேனும் இறக்குமதி செய்யவில்லை.

வரட்சி மற்றும் வெள்ள அபாயமும் ஏற்பட்ட போதும் எங்கள்  களஞ்சியங்கள் நிறைந்தே காணப்பட்டன.

அடுத்ததாக நகர மக்கள் அனுபவிக்கும் அனைத்து சுகபோகங்களும் 80 சதவீதமான கிராமத்து மக்களுக்கும் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். கிராம வீதிகள் காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்பட்டன.

கொன்க்ரீட் பாதைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

பலமான ஜனாதிபதி, பலமான அரசாங்கம் போன்று பலமான மாகாண சபையும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திற்கு அவசியம்' என்றும் அமைச்சர் பசில் ராஜபகஷ இங்கு தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X