2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

8 வயதுச் சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்தனர்.

55 வயதான ஒருவரையே நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைதுசெய்தனர்.

இச்சந்தேக நபர், சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சந்தேக நபரை கண்டி பிரதான நீதவான் ஏ.எம்.வசந்தகுமார முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோது தலா 100,000 ரூபா வீதம் 2  சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .