2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

'பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பானதாகும்'

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பான பாரிய அச்சுறுத்தலாகும்  என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.ம.சு.கூட்டமைப்பின்; கண்டி மாவட்ட வேட்பாளர்களது பிரதான காரியாலயத்தை கண்டியில் நேற்று புதன்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஜனாதிபதியால்; அடுத்த சில வருடங்களில் இந்நாடு முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் விசேடமாக அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட உள்ளன.
மாகாண சபைகளுக்கு பொலிஸ்; மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பான பாரிய அச்சுறுத்தலாகும். விசேடமாக வடபகுதிக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் வெளிநாட்டுச் சக்திகள் முக்கிய பிரயத்தனம் எடுத்துள்ளன. இது எமது தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் பாரிய சவாலாகும். எனவே ஒரு இறைமை கொண்ட நாடு என்ற அடிப்படையில் எமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது எமது முக்கிய பொறுப்பாகும்.

கடந்த காலத் தேர்தல்களை விடவும் இம்முறை இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது என்பது நாட்டினுள்ளே இன்னொரு பிராந்தியத்தை ஏற்படுத்த முற்படுவதாகும். நாம் கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட யுத்தத்தின்; வெற்றியை அது தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். அந்த அடிப்படையில் எமது யுத்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு காணி பொலிஸ்; அதிகாரங்களை மத்திய அரசு தொடர்ந்தும் வைத்திருக்க மாகாண சபைத் தேர்தல்கள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆயிரக்கணக்கான வாக்குகளை ஐ.தே.க. விற்கு மக்கள் அள்ளி வழங்கியபோதும் அவர்கள் நாடாளுமன்றம் சென்றதும் அரசுக்கே ஆதரவு தருகின்றனர். எமது அரசு மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளையும் நாட்டிற்கான சேவையையும் கண்டு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

எனவே வாக்குகளை வழங்கும்போது நாட்டுக்கு சேவை புரியக் கூடியவர்களை இனம் கண்டு புத்திசாதுர்யமான முறையில் வாக்களிப்பது மிக முக்கியம். எதிர்காலத்தில் ஜனாதிபதி மேற்;கொள்ளவுள்ள அபிவிருத்திப் பணிகளில் ஒருகட்டமாக கண்டி மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட உள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--