2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பிரேரணைக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


ஜெனீவா மனித உரிமை பேரவையில் நேற்று (27) இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை எதிர்த்து இன்று (28), கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா மற்றும் கண்டி வர்த்தக சங்கம், மீராமக்கம் பள்ளிவாசல் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றை, கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனெவிரத்னவிடம் கையளித்தனர்.

இன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, கண்டி மீராமக்கம் பள்ளியிலிருந்து நடையாக வந்த முஸ்லிம்கள், கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து, மாவட்ட செயலாளர் காமினி செனெவிரத்னவிடம் இவ் அறிக்கையை கையளித்தனர்.

இங்கு உரையாற்றிய கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சங்கத்தின் தலைவர் மௌலவி பஸ்லுல் ரஹ்மான், இலங்கையின் யுத்தம் முடிவுற்று இனங்கள் ஒற்றுமையாக வாழும் இக்காலப்பகுதியில் இவ்வாறான பிரேரணைகள் நிரைவேற்றுவதன் மூலம் மீண்டும் ஒற்றுமை சீர்குலையும் என தெரிவித்தார். இத் தீர்மான அறிக்கையை ஐநா சபைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஊடாக இவ்வறிக்கை ஐநா சபைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .