2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு பிணை

Editorial   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டு போராட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபை சொத்துக்கு இழப்பீடு பெற அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான  நீதவான் அசங்க எஸ். போதரகம, செவ்வாய்க்கிழமை (14) பிணை வழங்கினார்.

சந்தேகநபரின் மருத்துவ நிலை, அவரது நீண்ட கால தடுப்புக்காவல் மற்றும் பல விசாரணைகள் நிறைவடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு பிணை வழங்கப்பட்டதாக பிரதான நீதவான் தெரிவித்தார்.

சந்தேகநபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளை விதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

கிரிப்பன்வெவவிலுள்ள மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சொத்துக்கள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 885,000 இழப்பீடு பெற அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அரச சொத்துக்களை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தாக்கல் செய்த முறைப்பாட்டு மீதான விசாரணையின் போது பிணை வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X