2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வில்கமுவ பிரதேச சபையின் தவிசாளர், முன்னாள் தவிசாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மாத்தளை, வில்கமுவ பிரதேச சபையின் தவிசாளருக்கும்  முன்னாள் தவிசாளருக்கும்; எதிர்வரும் 09ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை (01) மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது  நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வில்கமுவ பிரதேச சபையின் தவிசாளர் ஜயந்த வீரசேகரவும் முன்னாள்; தவிசாளர் ரஞ்சித் குமாரசிங்கவும் மஹியங்கனை பிரதேசத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.

ஏற்கெனவே மார்ச் மாதம் 19ஆம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கப்பட்டது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .