2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பலசரக்கு கடையில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.ரம்ஸீன்

கம்பளை மலபார் வீதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றிலிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  வியாழக்கிழமை (03) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இக்கடையின் பின்புறமாகவுள்ள ஜன்னலினூடாக புகுந்த  கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .