2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

போலி இலக்கத்தகடு பொருத்திய வாகன உரிமையாளர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

போலி இலக்கத் தகடு பொருத்திய நவீன கப் ரக வாகனமொன்றை  கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி  ஒருவரை புதன்கிழமை (02) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வத்துகாமம் - கண்டி வீதியில் சென்றுகொண்டிருந்த மேற்படி வாகனத்தை  இடைமறித்தபோதிலும்,  நிறுத்தாமல் சென்ற அந்த வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்று பிடித்தனர்.

இவ்வாகனம் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு போலி இலக்கத் தகடுகள் பொருத்தியிருந்தமை விசாரணையின்போது தெரியவந்துள்ளதுடன், வாகனத்தின் காப்புறுதி மற்றும் பதிவுப் பத்திரங்களும்  போலியானவை எனவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .