2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பற்கோர்வை தொண்டையில் சிக்கி ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டைப் பகுதியில்  இடம்பெற்ற கைகலப்பின்போது செயற்கை பற்கோர்வை தொண்டையில் சிக்கியதால்,  மொரகஸ்கொடுவ பகுதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான  எச்.ஜீ.சூலாநந்த பெரேரா (வயது 69) என்பவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

சித்திரைப் புத்தாண்டையொட்டி உறவினர் ஒருவரின்  வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு விருந்துபசாரம் நடைபெற்றது. இவ்விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இடையில்  ஏற்பட்ட கைகலப்பில் பாதிக்கப்பட்ட நபரை மற்றுமொருவர் தாக்கியுள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட
நபரின் செயற்கை பற்கோர்வை அவரின் தொண்டையில் சிக்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மரண விசாரணையை கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே மேற்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--