2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பொருட்களை திருடி மலசலகூடத்தில் மறைத்து வைத்திருந்தவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மஹாவலி கங்கையில் நீராட சென்ற இளைஞரது இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் 4750 ரூபாய் பணம் அடங்கிய பொதியை திருடி பொருட்களை அவரது வீட்டின் மலசலகூடத்தில் வைத்திருந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸார் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளனர். 

செவ்வாய்க்கிழமை (22) மாலை மஹாவலி ஆற்றில் நீராட சென்றுள்ள இவ் இளைஞன் தனது இரண்டு கையடக்க தொலை பேசிகளையும் 4750 ரூபாய் பணத்தையும் ஒரு பொதியில் இட்டு நதிக் கரையில் வைத்துவிட்டு நீராட சென்றுள்ளார். நீராடி முடிந்த பின் பொதியை காணாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார.;;

பின்னர் பொலிஸார் விசாரணை நடத்தி அப் பொருட்களை திருடிய சந்தேக நபரை கைது செய்ததாகவும் சந்தேக நபரை இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்  செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X