2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சி.வி.யின் கருத்தை வரவேற்கிறேன் : இராதாகிருஷ்ணன

Kanagaraj   / 2014 ஜூலை 02 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் அனைவரும் பிரதேசவாதங்களை மறந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கிளிநொச்சியில் தெரிவித்திருந்த கருத்தை வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்;

இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நன்றாக புரிந்து கொண்டு தனது கருத்துக்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் முதலமைச்சர் கூறி வருகின்றமை மிகவும் வரவேற்க கூடியதும் காலத்திற்கு ஏற்ற ஒரு விடயமாகும். இந்த நாட்டில் மற்ற சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழு வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்ற போது, பிரதேசவாதங்களை கூறிக் கொண்டு சிறுபான்மை இன மக்கள் பிரிந்து நிற்பதானது இன்றை காலத்திற்கு ஏற்புடைய ஒரு விடயமல்ல.

குறிப்பாக தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாகவும் சகோதரர்களாகவும் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அது வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களாக இருந்தாலும் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களாக இருந்தாலும் மலையகத்தில் இருக்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இது பொருத்தமாக இருக்கும்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் எம்மை பிரித்து வைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் ஒரு சிலர் அவர்களின் தேவைகளுக்காக எம்மை பிரித்தாள நினைக்கின்றனர்.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் பிரதேச வாதங்களை மறந்து செயல்பட வேண்டும் என வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றமை அவருடைய முதிர்ந்த அனுபவத்தை எடுத்துக் காட்டுகின்றது. எனவே இதனை அனைவரும் உணர்ந்து செயல்படுவார்களானால் அது எமது மக்களுக்கு சிறந்த ஒரு செயற்பாடாக அமையும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .