2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இரத்தினபுரி, பதுளை வீதியில் விபத்து: ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.இரவீந்திரன்

இரத்தினபுரி, பதுளை பிரதான வீதியில் பத்துல்பான, வெளிமழுவ எனுமிடத்தில் இன்று புதன்கிழமை (02) லொறியேன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்நொருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
 
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த விமலா ரஞ்சனி (64) என்ற வயோதிப பெண் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இவரது கனவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சாரதி கண்னசர்ந்ததன் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும்  இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .