2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பரிசளிப்பு விழா

Sudharshini   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்


நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (01) கல்லூரியின் சௌமிய கலையரங்கத்தில் நடைபெற்றது.


இதன்போது, கல்லூரியில் கடமையாற்றிய முன்னாள் அதிபர்களான கலாநிதி எம்.கருணாநிதி, எஸ்.மாரிமுத்து, ஆர்.இராமகிருஸ்ணன், எம்.மோகன்ராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


மேலும், கல்லூரியில் பாட ரீதியாக அதிக புள்ளிகளை பெற்று முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


இவ்விழாவுக்கான அனுசரனையை பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் கொழும்பு கிளை வழங்கியிருந்ததோடு, பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் நுவரெலியா கிளையும் கல்லூரி நிர்வாகமும் இணைந்து இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X