2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவில் தமிழ்ப் பல்கலை;ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

Kogilavani   / 2015 ஜூலை 30 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சேனாதிராஜா

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

பன்வில பிரதேசத்தில், புதன்கிழமை (29) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழத்தை அமைத்தல், தோட்டங்களை கிராமங்களாக மாற்றுதல், 300 குடும்பங்களுக்கு ஒரு கிராமசேவகரை நியமித்தல், படித்த இளைஞர், யுவதிகளுக்கு 10 சதவீத அரச வேலைவாய்ப்பை பெற்றுகொடுத்தல், தேர்தல் முடிந்தவுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுத்தல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேலதிக பணத்தை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்' என்றார்.

'பெருந்தோட்ட மக்களின் நன்மைகளை கருத்திற்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள நாம், சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறோம். இ.தொ.கா.வின் தனித்துவத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக சேவல் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும்' ஆறுமுகன் தொண்டமான் இதன்போது கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .