2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இ.தொ.கா சுவரொட்டிகளுடன் இருவர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துகொண்டிருந்த வான் ஒன்றிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கு சொந்தமான 1,000 சுவரொட்டிகளை மீட்டுள்ளதுடன் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் இன்று (01) தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில்; மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு சொந்தமான 1,000 சுவரொட்டிகளுடன் ஹட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த வான் ஒன்றை  மல்லிகைப்பூ சந்தியில் வைத்து சோதனைக்குட்படுத்திய போதே இதிலிருந்து 1,000 சுவரொட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன், கைதான இருவரும் இ.தொ.கா.வின் உப தலைவர்கள் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .