2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அநுரவே பிரதமர்:மன்சில்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

'கடந்த 67 வருடங்களாக மாறி மாறி; நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள், நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச்சென்றன. இதனால், எதிர்வரும் தேர்தலுக்கு பின்,  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவே பிரதமராவார். எனவே, முஸ்லிம் மக்களும் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்' என  அக்கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் மன்சில் முதாலிப் தெரிவித்தார்.

கண்டியில்  சனிக்கிழமை (1) இடம்பெற்ற  பிரசாரக் கூட்டத்தில்; கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இன்று வரை, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட கூட்டமைப்புகளும் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால், நாளுக்கு நாள் இந்த நாடு வறுமையை நோக்கியும் அழிவை நோக்கியுமே சென்றுக்கொண்டிருக்கின்றது' என்றார்.

'தேர்தல் வரும்போது கண்டி மாவட்டத்துக்கு வருவோர், நான்தான் முஸ்லிம்களில் தலைவர் என்று வித விதமான வார்த்தைகளைக் கூறி முஸ்லிம் மகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர். எனினும், நாடாளுமன்றம் சென்ற பின்னர் முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆட்சியை அமைக்க துணை போகின்றார்கள்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது மக்கள் விடுதலை முன்னணியின் கோட்பாடாகும். அதனை நாங்கள் செயலில்; செய்து காட்டுவோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .