2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தொண்டமானுக்கு யார் தலைவர்? மஹிந்தவா? மைத்திரியா?: ரணில்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்யும் ஆறுமுகன் தொண்டமானுக்கு, மஹிந்த ராஜபக்ஷவா அல்லது ஜனாதிபதி மைத்திரிபாலவா தலைவர் என்பதை தொண்டமானே மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், எம்.திலகராஜ் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை நகரில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைப்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர், பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை தொடர்பில், தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுக்கொடுப்பேன்' என உறுதியளித்தார்.  

'ராஜபக்ஷவின் அராஜக அரசியலை ஒழிக்க கடந்த ஜனாதிபதி தேர்தலிலே திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் எம்மோடு கைகோர்த்தனர். அவ்வாறே ராஜபக்ஷவை வீட்டுக்கு துரத்தினோம். அவ்வாறான நிலையிலேயே இன்றும் நாம் இருக்கின்றோம். அவரை எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவோம். 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்பு பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்சஸ் காணியுடன் நவீன கிராமங்களை உருவாக்க தீர்மானித்துள்ளேன். இந்நாட்டில் ஏனைய மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் மலையக மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மலையகத்;தில் கல்விப் புரட்சியை ஏற்;படுத்த தீர்மானித்திருக்கின்றேன். இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமானால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து என்னை பலப்படுத்த வேண்டும்' என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .