2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.முவின் பிரசார அலுவலகம் தீயிட்டு எரிப்பு

George   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ 

கேகாலை இரம்புக்கனை தேர்தல் தொகுதியில் ஹிரிவடுன்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகம், வியாழக்கிழமை(06) தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் இரம்புக்கனை பொலிஸ் நிலையத்தில்  இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை இரம்புக்கனை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .