Kogilavani / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் ஆஸிக்
'விகிதாசாரத் தேர்தலில் இனரீதியான வாக்களிப்பு முக்கியமானது. இல்லையெனில் நாம் எமது பலத்தை இழந்துவிடுவோம்' என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலு குமார் தெரிவித்தார்.
எமது வாக்குகளை பிரித்து சிதறடிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் துணைபோக முடியாது' என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
'எம்மில் அநேகர் ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்பிருந்த நிலையை மறந்து, சுய இலாபம் கருதி குறுகிய மனப்பான்மையுடன் செயற்படுகின்றனர். அவ்வாறு நடந்துகொள்வதன் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.
'எந்த அரசு ஆட்சி செய்தாலும் எமது நிலை பலமானதாக இருக்கவேண்டும். அல்லாத பட்சத்தில் எம்மை மதிக்க மாட்டார்கள்.
கண்டி மாவட்டத்தை பொறுத்தவரை ஐ.தே.க.வில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மூன்றே மூன்று வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் இந்த மூன்று வேட்பாளர்களையும் அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெறச் செய்வதில் எவ்வித தங்கு தடையும் இருக்காது.
சுமார் 140,000 முஸ்லிம் வாக்களர்களும் 110,000 தமிழ் வாக்களர்களும் இணைந்தால் இரண்டரை இலட்சம் வாக்குகளாகிறன. இதில் அரைக்கரை வாக்குகள் அளிக்கப்பட்டாலும் ஒரு அபேட்சகர் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறமுடியும்' என்றார்.
எக்கட்சி ஆட்சி அமைத்தாலும் இனிவரும் காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு சவால் மிகுந்த ஒரு காலமே உருவாகப் போகிறது. எனவே சிறுபான்மை சார்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க சிறுபான்மை இன அங்கத்தவர்கள் தேவை. இதனை நாம் மறுப்பதற்கில்லை' என்றும் அவர் கூறினார்.
1 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 Dec 2025