2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறனை நகரில் மான் இறைச்சியை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 7 கிலோவும் 800 கிராம் மான் இறைச்சியை  அலவத்துகொடை பொலிஸார்  இன்று (09) அதிகாலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலிருந்து  அக்குறனை நகருக்கு லொறி ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட மான் இறைச்சியை,  விற்பனை செய்வதற்காக வைத்துக்கொண்டிருந்த போது,  நேற்று  அதிகாலை தேர்தல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்படும் மான் இறைச்சி ஒரு கிலோகிராம்  1,800 ரூபாய் தொடக்கம் 2,500 ரூபாய்  வரை விற்பனை செய்யப்படுகின்றது  என பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபரை இன்று (09) கண்டி நீதவான் முன்னிலையில்  பொலிஸார் ஆஜர்படுத்தினர். சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .