2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஐ.தே.க.வின் கனவு சிதறடிக்கப்பட்டுள்ளது: வீரவர்தன

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட 62 இலட்சம் வாக்குகளை பற்றி, ஐக்கிய தேசியக் கட்சி காணும் கனவு சிதறடிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் எரிக் வீரவர்தன தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டை பௌத்த மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த ஜனவரி மாதம் பொது வேட்பாளர் பெற்ற 62 இலட்சம் வாக்குகளில், ஐக்கிய தேசியக் கட்;சிக்கு 30 – 35 இலட்சத்திக்கும் குறைவான வாக்குகளே கிடைக்கம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பெற்ற 52 இலட்சம் வாக்குகளும் அவ்வாறே இருக்கின்றது. பொது தேர்தலில் அது மேலும் அதிகரித்துள்ளது' என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த ஆறு மாத கால ஆட்சியில் நாட்டுக்கு எந்த நல்லதும் செய்யப்படவில்லை. ஜனவரி எட்டாம் திகதி நடந்த தவறை திருத்திக்கொள்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்' என்றார்.

கண்டி மாவட்ட மக்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன்; திட்டம் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .