Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 01, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
தேயிலை பயிரிடாமல் காணப்படுகின்ற தரிசு நிலங்களை பெற்று, தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
'புதிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலை திட்டத்தினூடாக எமது மக்களுக்கு என்னால் 400 வீடுகளை அமைத்துக்கொடுக்க முடிந்தது. இன்னும் 5 ஆண்டுகள் மாத்திரம் தாருங்கள். என்னால் இந்த மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்ட முடியும்' என்றும் கூறினார்.
தலவாக்கலை விடுதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(9) நடைபெற்ற தோட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலிலே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'எமது இலக்கு சொந்த வீடு, சொந்த காணியாகும். இந்த இலக்கை அடைய என்னை நம்பி வாக்களியுங்கள்.
'பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள் தமது இறுதி காலத்தில் மிகவும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். தாம் வேலை செய்யும் காலப் பகுதிகளில் தோட்ட வீடுகளிலே பெரும்பகுதியை போக்கும் இவர்கள், தமெக்கென தனி வீடை அமைத்துகொள்ள தவறுகின்றனர்.
அதற்கேற்ப பொருளாதார வளமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. தாம் பெருந்தோட்டங்களிலிருந்து ஓய்வுபெற்றவுடன் தமது சேமலாப நிதியினூடாகவே வீடு அல்லது காணிகளை வாங்கி தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொள்கின்றனர்.
எனவே, இவ்வாறானதொரு நிலை மாறவேண்டும். அவர்களும் சொந்தமான, தனி வீடுகளில் வாழ வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்பு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago