2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க.வுக்கு வாக்கு பலமில்லை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் ஆஸிக்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்கு பலமில்லை. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே வெற்றிபெரும் என ஐ.ம.சு.கூவின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எம்.எம்.சிம்சான் கூறினார்.

அக்குறணையில் திங்கட்கிழமை(10) இடம்பெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஜனாதிபதி தேர்தலின்போது, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அனைத்து கட்சிகளிதும் வாக்குகளை பெற்றே சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இன்று அக்கட்சிகள் அனைத்தும் பிரிந்துவிட்டன. தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு பலமில்லை.

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே ஆட்சி அமைக்க போகின்றது. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். எனவே, புதிதாக உருவாகும் அரசின்மூலம்  எங்களுக்கு சேவையை பெற்றுக் கொள்தற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கத்தவர்கள் தெரிவாக வேண்டும்' என்றும் அவர் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .