2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

380 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

'ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு என்பதை ஆச்சர்யமாக பார்க்க முடியாது. தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்துக்கும் மேலதிகமாக 380 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்' என சர்வமதத் தலைவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஹரிட்டாஸ் செட்டிக் நிறுவனம், மக்கள் தோட்ட சிவில் அமைப்புகள் மற்றும் தோட்ட கிராமிய தலைவர்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து ஹட்டன், செட்டிக் நிறுவன கேட்போர் கூடத்தில் நடத்திய மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்கள்,

'நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக உள்ள தொழிலாளர்களுக்கு 380 ரூபாயை தொழிற்சங்க ரீதியாக அன்றி அரசியல் ரீதியாக ஏன் பெற்றுக்கொடுக்க முடியாது? இவர்கள், அற்ப சம்பளத்துக்காக ஒவ்வொரு வருடமும் போராட வேண்டியுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார்துறை ஊழியர்களுக்கும் 2,500 ரூபாயை பெற்றுக்கொடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டும் புறக்கணிக்;கப்பட்டுள்ளனர்' என்றனர்.  

'இப்போது மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு உடனடியாக தேவைப்படுவது வீடு, காணியல்ல. சம்பள உயர்வுதான். சம்பள உயர்வு வழங்க வேண்டிய காலத்தில் கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக வழமையாக கூறப்படுகின்றது. அப்படியானால் இலாபத்தில் இயங்கும்போது மட்டும் தொழிலாளர்களுக்கு இலாபத்தில், பங்கு பிரித்து வழங்கப்படுகின்றதா?' என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

'தோட்ட நிர்வாகத்துக்கு ஆடம்பர வாகனங்கள், தோட்ட காரியாலயங்களில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள், முகாமையாளர்களின் ஆடம்பரச் செலவு,  குளிரூட்டப்பட்ட அறைகளில் அதி ஆடம்பர செலவுகள் போன்றனவே தோட்ட கம்பனிகள் நட்டத்தில் இயங்க காரணமாகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் கண்மூடித்தனமாக செலவு செய்யப்படுவதால்தான் கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன. இதற்கு தொழிலாளர்கள் காரணமில்லை.   கம்பனிக்காரர்களும் நிர்வாக ஊழியர்களும் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.  

எனவே, வருமானம் குறைந்த நிலையில் தமது வாழ்வை கொண்டுச் செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்க்கொண்டுள்ள மலையக மக்களுக்கு அரசாங்கம் தலையிட்டு நல்லதொரு தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .