Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'இன்று பெருந்தோட்ட தொழிளாலர்கள் வேதன உயர்வின்றி இம்மாத வாழ்வாதாரத்ததை கொண்டுச் செல்ல வழியில்லாமல் திண்டாடுகின்றார்கள்.இதற்கு காரணம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளிடையே ஒற்றுமை இன்மையின்மையாகும். ஒற்றுமையுடன் செயற்படும் தன்மையை இவர்கள் கொண்டிருந்தால் சம்பள உயர்வு எப்போதே கிடைத்திருக்கும்' என ஜனநாயக முண்ணனியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ரசிக சம்பத் தெரிவித்தார்.
வாக்களிக்கும் முறை தொடர்பாக மக்களுக்கு தெரிவுபடுத்தும் கூட்டம் இன்று (11) லிந்துலையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மலையக பகுதிகளில் ஆங்கில கல்வியை விருத்தி செய்வதன் மூலம் தொழிளாலர்களின் பிள்ளைகளுடைய எதிர்காலம் முன்னேற்றம் அடையும். இதற்காக நவீன கல்வி முறை ஒன்று மலையக தோட்ட பகுதிகளுக்கு அவசியம். இதனை மையமாக கொண்டு நுவரெலிய மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தோட்ட பகுதிகளிலும் 05 தோட்டங்களை உள்ளடக்கி ஆங்கில கல்வி நிலையம் ஒன்றை அமைப்பதே எனது நோக்கு' என குறிப்பிட்டார்.
'பெருந்தோட்ட பகுதிகளிலில் தோட்ட தொழிலைத் தவிர்ந்த பொருளாதார முன்னேற்றத்துக்கான மாற்று நடவடிக்கை தேவை. இதற்கு கல்வி அறிவு அவசியம். அதுவும் ஆங்கில கல்வி அறிவு அவசியம்' என்றார்
நாட்டில் நல்லாட்சி ஒன்று அவசியம். அதற்கு ஊழல் மற்றும் மோசடிகள் அற்ற தலைமைத்துவம் முக்கியம். நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்கு சக்தி உங்களிடம் உள்ளது. அதனை உரிய முறையில் பயன்படுத்தி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் வரை உழைத்த இராணுவ வீரர் சரத் பொன்சேகா தலைமையிலான, ஜனநாயக கட்சியின் சுடர் ஒளி சின்னத்துக்கு வாக்களித்து என்னை போன்ற சமுக நோக்கம் கொண்ட இளைஞர்களை வெற்றியடைய செய்ய வேண்டும்' என வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago
1 hours ago