2021 மார்ச் 03, புதன்கிழமை

கார் மோதியதில் வயோதிபர் பலி

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பிலியம கோபல்லவில் கார் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், 74 வயதுடைய சமரபிவ விமலசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.

பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த   வயோதிபர் மீது மோதிவிட்டுச் சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்தப்போதும் அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .