2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மக்கள் மனதை வெல்ல வேண்டும்: ஹரேந்திரநாத் துனுவில

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மக்கள் மனதை வெல்லும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்து கொள்கிறது என்றாலும் மஹிந்த ராஜபக்ஷ குழுவினரின் செயற்பாடுகள் பயமுறுத்தலாகவும் பீதியை ஏற்படுத்துவதுமாகவும் அமைந்துள்ளன என கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரும் பாத்ததும்பறைத் தொகுதியின் ஐ.தே.க.பிரதான அமைப்பாளருமான ஹரேந்திரநாத் துனுவில தெரிவித்தார்.

வத்துகாமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே  அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் மேலும் கூறுகையில்,

கண்டி மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய தேசிய முன்னணி குறைந்தது 8 ஆசனங்களையாவது வென்றெடுப்பதுடன் 1977ஆம் ஆண்டு ஐ.தே.க. பெற்ற மாபெறும் வெற்றிக்கு ஈடான ஒரு வெற்றியை ஈட்டும். மக்களது மனதை வெல்லும் வகையில் அரசியல் வாதிகள் நடந்து கொள்வதே அரசியலில் மிக முக்கிய மானதாகும். அதற்காக மிகப் பணிவுடனும் அன்பாகவும் அரசியல்வாதிகள் நடந்து கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறுதான் நடந்து கொள்கிறது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ குழுவினரின் செயற்பாடுகள் பயமுறுத்தலாகவும் பீதியை ஏற்படுத்துவதுமாகவும் அமைந்துள்ளன. அதேநேரம் ஒரு பிழையான அரசியல் கலாச்சாரத்தை நோக்கி மஹிந்த தரப்பினர் செல்வதாகவும் தெரிவித்தார். கடந்த காலங்களில் அதுதான் நடந்தது. அதனை மாற்றி அமைப்பது இன்றைய நிலையில் பாரிய சவலாக உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் கற்ற பாடமும் அதுதான். மரண அச்சுறுத்தலோ வாக்களர்களைப் பீதி அடையச் செய்வதோ, பொய் வாக்குறுதி வழங்குவதோ வெற்றிக்கு வழிகாட்டாது. ஆனால், மக்களின் சிந்தனையைத் தூண்டும் செயற்பாடுகள் மூலம் வெற்றி பெற முடியும் என்ற ஒரு உண்மையை கடந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு உணர்த்தியது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .