2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர்கள் பலி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா மவுஸாக்கலை நீர்தேக்கத்துக்கு இன்று சனிக்கிழமை (15) காலை நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா, குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும் மேற்படி இரண்டு இளைஞர்களும் விளையாடச்செல்வதாக கூறிவிட்டே வீட்டை விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மவுஸாக்கலை நீர்தேக்கத்தின் டெனியன் தோட்ட நீர்தேக்கப்பகுதியில் நீராட சென்ற இரண்டு இளைஞர்களில் ஒருவர் நீரிழ் மூழ்கியதையடுத்து, அவரை காப்பாற்றச் சென்ற மற்றயவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பிரதேச மக்கள் சுமார் 1 மணிநேர காலத்துக்கு பின்னர் இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள், மஸ்கெலியா குயின்ஸ்லன் பகுதியைச் சேர்ந்த ரஜேந்திரன் யோகஸ்வரன் (வயது – 19), விஜயரட்ணம் கிருஷ்ண குமார் (வயது - 17) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .