Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 04, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
லிந்துலை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட மெரேயா பகுதியில் இயங்கிய விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான திறன் அபிவிருத்தி நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13ஆம் திகதி இரவு மெரேயா, ஓல்ரீன் தோட்டத்தில் இயங்கிவந்த மேற்படி நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மறுநாள் நிலையத்தை திறக்கச் சென்ற ஆசிரியர், கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு நிர்வாக பொறுப்பாளருக்கு அறிவித்த பின் உடனடியாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
நிலையத்திலிருந்த மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திரிபோசா பக்கெட்டுகள் களவாடப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago