2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

விடிவுப் பயணம் தொடரும்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கண்டி மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள பங்களிப்பு செய்த சகலருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். தமிழர்கள் உணர்வுடன் செயற்பட்டதோடு இஸ்லாமிய, சிங்கள சகோதரர்கள் நேச ஒத்துழைப்பை வழங்கியமை நன்றிக்குறியதாகும்' என ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இணைப்பாளர் அருணாச்சலம் லெட்சுமணன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 'தமிழ் பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் கைக்கூலியாக செயற்பட்ட அணியின் பொய்ப் பிரசாரங்களை செவிமடுக்காது அணி திரண்ட மக்களுக்கான விடிவுப் பயணம் வெற்றியோடு தொடரும். இவ்வாறு திட்டமிட்டு சமூக துரோகத்தை மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு அறியாமலேயே பலியாகும் அன்பர்களும் மனம் திருந்த வேண்டும். இனியாவது அர்த்தமுள்ள பயணத்தில் இணைய வேண்டும்' என்றார்.   

'பலத்த சவாலுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட இவ் வெற்றியினூடாக இனங்களுக்கிடையிலான புரிதலோடு இம்மாவட்ட வாழ் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டியதுடன் அவர்களின் வாழ்வியலில் மாற்றத்துக்கான செயற்பாடுகளில் வேலுகுமார் தலைமையிலான அணிதிரட்டலோடு முன்நோக்கி நகர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .