Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்களுக்காக முழுமையான சேவையை ஆற்றவுள்ளேன். நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் நாம் முன்னெடுத்த தனிவீட்டுத்திட்டம் குறித்து மக்களுக்கு இன்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து தோட்டப்பகுதிகளிலுள்ள லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிட உள்ளேன்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்குகளால் முதல் இடத்துக்கு தெரிவான இவருக்கு ஹட்டனில் நேற்று புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்காக, ஏற்படுத்தப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக அமைந்த தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தோட்ட உத்தியோகஸ்தர்கள், தோட்ட மருத்துவ உதவியாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், மலையக இளைஞர் - யுவதிகள், வர்த்தகர்கள், கொழும்பில் தொழில்புரிகின்ற இளைஞர், யுவதிகள், சகோதர இனத்தவர்கள் உட்பட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்' என கூறினார்.
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago