2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கடைக்குள் ரகளை செய்த 7பேருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.எம்.ரிஃபாத்

குருநாகலில் அமைந்துள்ள கடையொன்றின்  உரிமையாளர் மற்றும் ஊழியரை  தாக்கிய குற்றச்சாட்டில் கைதான எழுவரையும் எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்ற நீதவான், சனிக்கிழமை மாலை உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை(21) அதிகாலை, மேற்படி உணவகத்துக்குள் மதுபோதையில் நுழைந்த எழுவரும் உணவகத்தின் உரிமையாளர், அங்கு பணிபுரிந்த ஊழியரை  தாக்கியுள்ளனர். இத்ததாக்குலில் காயமடைந்த இருவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேக நபர்களை சனிக்கிழமை(22) கைதுசெய்ததுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவைப்பிறப்பித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .