2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

கைத்தொழில் அமைச்சு அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

அனர்த்தம் காரணமாக கைத்தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை அதிகாரிகள் இதன்போது சமர்ப்பித்ததுடன், கைத்தொழில் துறையை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில், கைத்தொழில் துறையினருக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X