2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மது போதையில் வாகனம் செலுத்திய 22பேர் கைது

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, அலவத்துகொடை பொலிஸ் பிரிவில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது மது போதையில் வாகனம் செலுத்திய 22 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் ஆலோசனைக்கு அமைய இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அலவத்தகொடை பொலிஸ் பிரிவில் மது போதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக மட்டுமே இத்தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட 22 சாரதிகளையும் கண்டி பிரதான நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட்டபோது ஒருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--