2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உயர்தர பரீட்சையில் 28 மாணவர்கள் சித்தி

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 28 மாணவர்கள் உயர்தர பரீட்சையில்  சிறந்த பெருபேறுகளை பெற்று பல்கலைகழகத்திற்கு தேர்ச்சிபெற்றுள்ளார்கள்.

சித்தி பெற்ற மாணவர்களையும், கல்வி கற்பித்த அதிபர், ஆசிரியர்களையும் இ.தொ.கா பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பாராட்டி  கௌரவித்தார்.

இந்நிகழ்வு அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொருளாதார பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷா சிவராஜா, மத்திய மாகாண உறுப்பினர்களான ராம், ரமேஸ், உதயகுமார், மில்கோ நிறுவனத்தின் தலைவர் சுனில் விக்கிரமசிங்க, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--