2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

3 மாத குழந்தையை விற்க முனைந்த தாயும் தரகரும் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                     (மொஹொமட் ஆஸிக்)

கண்டி ரங்கலை பிரதேசத்தில் பிறந்த மூன்று மாத குழந்தையொன்றை சிலாபம் பிரதேசத்தில் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்த அக்குழந்தையின் தாயாரையும் அதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும்  தரகரையும் தெல்தெனிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தெல்தெனிய பிரதான நீதவான் பிரசன்ன லியனகே முன்னிலையில் இன்று ஆஜர் செய்த போது, இம்மாதம் 29ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார்.

இக்குழந்தையை யாருக்கு, எவ்வளவு பணத்துக்கு விற்பனை  செய்வற்கு முயற்சி செய்தார்கள் என்பது தொடர்பான மேலதிக விசாரனைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--