2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

30 இலட்சம் ரூபாய் மோசடி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பேராதனை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்படுவதாக கூறி சுமார் முப்பது இலட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசேட விசாரணைகளை கண்டி விஷேட பொலிஸ்; பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்,  பேராதனை பல்ககலைகழக உப வேந்தருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

 'மோட்டார் சைக்கில்கள் கிடைக்காத பல்கலைகழக ஊழியர்களுக்கு முச்சக்கர வண்டிகள் சலுகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன என வங்கி கணக்கொன்றை குறிபிட்டு அக்கடிதம் உப வேந்தருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டபின்,  வழங்கப்பட்ட வங்கி கணக்குக்கு  9 ஊழியர்கள் தலா 25,000ஆம் ரூபாய் வீதம் வைப்பு செய்துள்ளனர்.

இது ஒரு மோசடி என தெரியவந்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  உடனே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் கண்டி விசேட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .