2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

350 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Super User   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா, ராகலை சென் லெனாட்ஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராகலை, சென் லெனாட்ஸ் தோட்டத்திற்கு சொந்தமான தோட்ட அதிகாரியின் தங்குமிடத்தையும் தொழிலாளர்களின் காரியாலயத்தையும் தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறியே இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 350 தொழிலாளாகள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இடம் தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கப்படுமானால் தங்களுடைய அன்றாட காரியாலய விடயங்களுக்காக இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ராகலை காரியாலயத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்ற காரணத்தையும் தொழிலாளாகள் இதன்போது முன்வைத்தனர்.

எனவே உடனடியாக நிர்வாகம் இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தமது போராட்டம் தொடரும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னனி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விநாயக சுந்தரம் கருத்து தெரிவிக்கையில்,

"நாங்கள் இந்த விடயம் தொடர்பாக எமது கொழும்பு காரியாலயத்திற்கு அறிவித்திருக்கின்றோம். அவர்கள் மத்துரட்ட பிளான்டேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் நல்ல தீர்வு ஓன்று இன்று மாலைக்குள் கிடைத்துவிடும் என நம்புகின்றோம். நாங்கள் இங்கு முகாமையாளர் மகேந்திர வணசிங்கவிடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இதனால் தனியாருக்கு கையளிக்கும் திர்மானத்தை நிர்வாகம் கைவிடும் என தாம் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

தோட்ட அதிகாரியின் தங்குமிடத்தை உல்லாச விடுதியாக மாற்றும் திட்டம் ஒன்றும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .