2021 ஜனவரி 23, சனிக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் 4 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை -  குருநாகல் வீதியிலுள்ள  வர்த்தக நிலையமொன்றிலிருந்து  400 கிராமுடைய 158  பால்மா பைக்கட்டுக்களையும் 25 கிலோ மைசூர் பருப்பையும் திருடிச்சென்று  பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியரொருவரும் மற்றும் இவரது 3 நண்பர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பால்மா பைக்கட்டுக்களும் மைசூர் பருப்புமே  திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேசப்பிரிய ஜயதிலக்க உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .