2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கம்பளையில் 4 மர ஆலைகள் சுற்றிவளைப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம். எம். ரம்ஸீன்)

கம்பளை நகரை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படும் 4 மர ஆலைகளை நேற்று புதன்கிழமை பொலிஸ் குழு மற்றும் வன இலாக அதிகாரிகள் சுற்றிவளைத்ததுடன் சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.

இம்மர ஆலைகள் தொடர்பாக கண்டி அம்பகோட்டை வன இலாகா அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்படி சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இம்மர ஆலைகளிலிரந்து மஹோகனி, பலா, தூணா முதலிய மர வகைகளை சேர்ந்த 10 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X