2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தெரணியகலையில் 446 தேசிய அடையாள அட்டைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நதீர் சரீப்தீன்)

தெரணியகலையின், நக்காவிட்ட எனும் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் 446 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதாக தெரணியகலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை நக்காவிட்ட நாலந்தாராம விகாரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியின் கற்குகையினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த பையொன்றினுள் மேற்படி அடையாள அட்டைகள் இருந்ததாகவும் அதனை பொலிஸார் மீட்டெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி அடையாள அட்டைகள் தெரணியகலை பிரதேசத்தையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் சேர்ந்தவர்களினது ஆகும் என சந்தேகிப்பதாகவும் அடையாள அட்டைகளை இழந்தவர்கள் தெரணியகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.அஜித் பிரசன்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .